2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

37 இலட்சம் பெறுமதியான சிகரெட் அட்டைகள் சிக்கின

Mayu   / 2024 ஒக்டோபர் 14 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற பெண் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் துபாயில் வீட்டு வேலை செய்து வந்த , பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளன​ர்.

துபாயிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (13) Fitz Air விமானமான FZ-549 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த பெண்ணின் லக்கேஜில் "மான்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகையைச் சேர்ந்த 25,000 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் அடங்கிய 125 சிகரெட் அட்டைகளை கைப்பற்றினர்.

​மேலும், குறித்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்,  சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த சிகரெட் தொகையுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் புதன்கிழமை(16) ஆம் திகதிமுன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிகேஜி கபில

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X