2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

360 சிகரெட் அட்டைப்பெட்டிகளுடன் பெண்கள் கைது

Mayu   / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 01மில்லியன் 08 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு சென்ற இரண்டு பெண்கள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சனிக்கிழமை (05) கைது செய்யப்பட்டனர்.

இதற்கமைய,  வரகாபொல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண் அபுதாபியிலிருந்து EY-394 Etihad Airlines விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுள்ளதோடு, துபாயிலிருந்து Fitz Air Flight 8D-822 இல் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் வந்தடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

கைதான இருவரும் டுபாயில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் என பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

72,000 "மான்செஸ்டர்" ரக சிகரெட்டுகள் அடங்கிய 360 சிகரெட் அட்டைப்பெட்டிகளை அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த போது, ​​போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இரு விமானப் பயணிகளுடன் சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகள் புதன்கிழமை (09)  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.

டிகேஜி கபில


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X