2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

27 போதைப்பொருள் மூட்டைகள் மீட்பு

Editorial   / 2024 நவம்பர் 15 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முசல்பிட்டி பகுதியில் உள்ள குளத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதை மாத்திரைகள் அடங்கிய 27 மூட்டைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவை, இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தேர்தல் ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த கற்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் வியாழக்கிழமை (14) இரவு இந்த  மூட்டைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

கைப்பற்றப்பட்ட மூட்டைகளில் 442,060 போதைப்பொருட்கள் இருந்ததாகவும், அதன் மொத்த பெறுமதி பத்து கோடிக்கு மேல் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X