Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 12 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னணி நுண்-நிதி நிறுவனங்களில் ஒன்றான மொனிக், 2024 ஆம் ஆண்டிற்கான தனது ஊழியர்களை பாராட்டும் விழாவை குருநாகல் எபிடோம் ஹோட்டலில் அண்மையில் நடத்தியது.
தேசிய வீடமைப்பு ஆணையாளரும் எல்.சி.பி. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சிரேஷ்ட சட்டத்தரணி காமினி பெரேரா,எல்.சி.பி. பைனான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.ஜி. லீலாநந்த மற்றும் மொனிக் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி வாசல மதுவந்த ஆகியோர் இந்த நிகழ்வில் பிரதான அதிதிகளாக கலந்த்துகொண்டனர்.
தமது நிறுவனம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெற்றிகரமாக பயணிப்பதற்கு தமது நிறுவன ஊழியர்கள் தவறாது பங்களிப்பை வழங்கியதாக மொனிக் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி மதுவந்த வாசல ஆரியபால இதன்போது தெரிவித்தார். இதன்போது விற்பனை இலக்கை வெற்றிகரமாக எட்டிய அதிகாரிகளுக்கு வாகனங்கள் உட்பட பெறுமதியான பல்வேறு பரிசுகள் வழங்கப்படன.
மொனிக் குழுமமானது, வீட்டுக் கடன், கட்டுமான நிதி, தங்கக் கடன், வாகனக் கடன், வணிகக் கடன் மற்றும் நுண்கடன் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago