2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

2,137 சங்குகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2025 ஜனவரி 15 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம், கற்பிட்டி - பராமுன கடல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை சிறிய சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு கடற்படைக்குச் சொந்தமான விஜய கடற்படையின் விசேட ரோந்து கப்பல், கற்பிட்டி - பராமுன பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது, குறித்த கடல் பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த டிங்கி இயந்திர படகில் 7 சென்றி மீற்றர் அளவு கொண்ட சிறிய அளவிலான சங்குகள் இருந்துள்ளமை அவதானித்துள்ளனர்.

குறித்த படகில் 15 உர மூட்டைகளில் சிறிய அளவு கொண்ட 2,137  சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி, மண்டலகுடா பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட சிறிய சங்குகள், டிங்கி இயந்திர படகு என்பனவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடல் தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்  என கடற்படையினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X