Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 மே 29 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் நகரைச் சேர்ந்த விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களும், சகோதரர்களுமான ஆசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன், ஆசிரியர் எம்.எப்.எம்.துபைல் ஆகிய இருவரும் மாஸ்டர் தடகள சம்பியன்ஷிப்பில் கலந்துக்கொண்டு வெற்றியடைந்து சாதித்துள்ளனர்.
உயரம் பாய்தலில் ஹுமாயூன் ஆசிரியர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். இவர் 1.5 மீற்றர் உயரத்தை தாண்டி இந்த தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். இதேவேளை இவர் நீளம் பாய்தலில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.
அதேபோன்று ஆசிரியர் துபைல் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
இவர்களது இந்த அயராத தொடர் முயற்சிக்கும், வெற்றிக்கும் புத்தளம் நகரின் முக்கூட்டு தலைமைகளான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா. புத்தளம் நகர கிளை, புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் நகர சபை என்பன தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago