Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 17 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம். ஷினாஸ்
சாஹிராக் கல்லூரியில் கல்வி கற்ற 46 வயதுக்கு மேற்பட்ட பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஸகிரியன் லெஜன்ட் பிறீமியர் லீக் கிரிக்கட் தொடரானது இம்மாதம் 28, 29ஆம் திகதி ஆகிய தினங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடரில் லெஜன்ட் 90, லெஜன்ட் 91, லெஜன்ட் 92, லெஜன்ட் 93, லெஜன்ட் 95 மற்றும் லெஜன்ட் 96 உட்பட மொத்தம் ஆறு அணிகள் பங்குபற்றுகின்றன.
இத்தொடரானது இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஏ குழுவில்
லெஜண்ட் 90, லெஜண்ட் 91, லெஜண்ட் 92 பி குழுவில் லெஜண்ட் 93, லெஜண்ட் 95,
லெஜண்ட் 96 ஆகிய அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட குழுப்போட்டிகளாகவும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் 12 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களாகவும் நடத்தப்படும்.
விஷேடமாக இச்தொடரில் இரு ஓவர்களை பவர் பிளயர் ஆட்டமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதோடு, வெற்றி பெறும் அணிகளுக்கு இரண்டு புள்ளிகளும் ஆட்டம் சமநிலையில் முடிவுறும் போது தலா சுப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.
பின்வரும் அட்டவனை முறையே போட்டிகள் நடைபெறும்.
2023.10.28
லெஜன்ட் 90 எதிர்
லெஜன்ட் 91 அணியினரும்,
லெஜன்ட் 92 எதிர்
லெஜன்ட் 93 அணியினரும்,
லெஜன்ட் 95 எதிர்
லெஜன்ட் 96 அணியினரும் மோதவுள்ளனர்.
2023.10.29
அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
8 hours ago