Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 25 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகமானது 1999 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டு வெள்ளி விழா காண்கின்றது.
தங்களது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் பேரணியொன்று கழகத் தலைவர் ஸட்.எம். றிஹாஸ் இஸ்மாயில் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பேரணி வாழைச்சேனை பொது மைதானத்துலிருந்து ஆரம்பமாகி இந்த வாகன பேரணி ஓட்டமாவடி சுற்றுவட்ட சந்தியினூடாக மீண்டும் வாழைச்சேனை பொது மைதானத்தை வந்தடைந்தது. இதன்போது கழக உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் உற்சாகமாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த வெள்ளி விழா நிகழ்வை முன்னிட்டு கழக அங்கத்தவர்களை 4 அணிகளாக வகைப்படுத்தி கிரிக்கெட், கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டப் போட்டிகள் நாடாத்தப்பட்டவுள்ளதோடு புதன்கிழமை (26) விசேட கௌரவிப்பு நிகழ்வும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பிரதேசத்தில் விளையாட்டில் பிரகாசித்த வீரர்கள் மற்றும் நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் வீரர்களையும் கௌரவிக்கப்படவுள்ளதுடன் இரவு நேர விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago