2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

வெற்றிவாகை சூடிய கல்முனை பெஸ்ட் லெவிண்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 16 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

துறைநீலாவணை சென்றல் விளையாட்டுக் கழகம் நடாத்திய நாகேந்திர்ன் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத் தொடரில் கல்முனை பெஸ்ட் லெவிண் அணி வெற்றிவாகை சூடியது

 64 அணிகளை உள்ளடக்கிய அணிக்கு எட்டுப் பேர் கொண்ட 5 ஓவர்கள் மின்னொளியிலான இத்தொடரின் இறுதிப் போட்டியானது துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றபோது அக்கரைப்பற்று ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தை வென்றே பெஸ்ட் லெவிண் வெற்றிவாகை சூடியது.

பெஸ்ட் லெவிணுக்கு 50,000 ரூபாய் பணப்பரிசும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியின் நாயகனாக பெஸ்ட் லெவிணின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் றஸாவும், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், அதிகூடிய ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீரராகவும் சகலதுறை வீரர் அப்லால் காரியப்பர் தெரிவாகினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .