Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 24 , பி.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம். பர்ஸான், எம்.எம். அஹமட் அனாம்
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை பழைய மாணவர் அமைப்பினர் நடாத்திய அந்நூரின்ஸ் கிரிக்கெட் தொடரை 2013 க.பொ.த. பழைய மாணவர் அணி கைப்பற்றியுள்ளது.
28 அணிகள் பங்குபற்றிய குறித்த தொடரின் இறுதிப் போட்டியானது அந்நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்றபோது 2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர அணியை வென்றே தொடரை 2013 அணி கைப்பற்றியது.
ஆறு ஓவர்கள் கொண்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2013 அணி, 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 63 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 2017 அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களையே பெற்று ஒன்பது ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இத்தொடரின் நாயகனாகவும், சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் 2013ஆம் ஆண்டு அணியின் வீரர் கே.எம். இல்ஹாமமும், சிறந்த பந்து வீச்சாளராக 2007ஆம் ஆண்டு அணியின் வீரர் எம்.சி. றிபாஸும், இளம் வீரராக 2015ஆம் ஆண்டு அணியின் வீரர் எம்.ஏ.சி.எம். பாஸில் தெரிவாகினர். லெஜன்டாக 1995ஆம் ஆண்டு அணியின் வீரரான ஏ.எல்.எம். நௌபர் தெரிவாகியதோடு, சிறந்த பிடி எடுப்புக்கான விருது 1994ஆம் ஆண்டு அணியை சேர்ந்த வீரர் எம்.ரீ.வை. அறபாத்துக்கு கிடைத்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago