2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மைதானமின்றி தேசியத்தில் சாதிக்கும் சிலாபம் நஸ்ரியா கல்லூரி மாணவர்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியில் பாடசாலைக்கான சிறந்ததொரு விளையாட்டு மைதானம் இல்லாமையினாலும் கூட இப்பாடசாலை மாணவர் அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றனர்.

அண்மையில் குருநாகல் வெலகெதர விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட போட்டிகளில் நஸ்ரியா கல்லூரி மாணவன் எம்.என்.எம். நாஸிஹ், 20 வயதுக்குட்பட்ட தடகள போட்டியில் நான்காமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார். இந்த மாணவன் நஸ்ரியா மத்திய கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்ட தடகள போட்டியில் பங்குபற்ற இருப்பது சிறப்பம்சமாகும். 

அஞ்சலோட்டம் உட்பட பாடசாலை கிரிக்கெட் அணியில் தனது திறமையை பாரிய அளவில் நாலிஹ் வெளிப்படுத்தி வருகிறார்.  

இந்த மாணவரை போன்றே பல மாணவர் பாடசாலையில் விளையாட்டு மைதானம் இன்றியே தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். 

பாடசாலை சமூகத்தின் சிறந்த வழிகாட்டல்களும், அதிபர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இவர்களை போன்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பது வரவேற்கத்தக்கது

சாதிக்கத் துடிக்கும் இவரை போன்ற பல மாணவர்கள் பயிற்சியுடனும், மனவலிமையுடனும் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .