2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

முல்லை மரதனோட்டப் போட்டி: கேமா, சுபராஜ் வென்றனர்

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை கிராமத்தின் மைந்தன் கந்தசாமி பத்மநாதனின் பூரண நிதிப் பங்களிப்பில் மாபெரும் மரதனோட்டப் போட்டியானது, மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆண்களுக்கான மரதனோட்டப் போட்டியானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி முன்பாக ஆரம்பித்து முள்ளியவளை முல்லைத்தீவு பிரதான வீதியூடாகச் சென்று முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி வழியாக அலம்பிலைச் சென்றடைந்து தொடர்ந்து அலம்பில் குமுழமுனை வீதிவழியாக குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. 

பெண்களுக்கான மரதனானது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி வழியாக அலம்பிலைச் சென்றடைந்து தொடர்ந்து அலம்பில் குமுழமுனை வீதிவழியாக குமுழமுனை மகாவித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. 

இந்த மரதனில் 179 வீரர்களும், 60 வீராங்கனைகளும் கலந்துகொண்டனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற இருபாலருக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.

ஆண்கள் பிரிவில் முதலாமிடம் ஜெ. சுபராஜ் – கொக்குத்தொடுவாய்,

இரண்டாமிடம் எஸ். யாழ்மைந்தன் - வள்ளுவர்புரம் விசுவமடு,

மூன்றாமிடம் எஸ். அகிலன் தியோநகர் சிலாவத்தை 

பெண்கள் பிரிவில் முதலாம் இடம் என். கேமா - குரவயல் உடையார்கட்டு, இரண்டாமிடம் விதுசா - கெருடமடு மன்னகண்டல், மூன்றாமிடத்தை மாணிக்கபுரம் விசுவமடுவை சேர்ந்த ஏ. அபிநயா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .