Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டயலொக் பாடசாலைகள் றக்பி லீக் தொடரில் சென். பீற்றர்ஸ் கல்லூரி சம்பியனாக முடிசூடியது.
பம்பலப்பிட்டியவில் வௌ்ளிக்கிழமை (18) நடைபெற்ற இசிப்பத்தன கல்லூரியுடனான இறுதிப் போட்டியில் 28-17 என்ற புள்ளிகள் கணக்கில் சென். பீற்றர்ஸ் சம்பியனாகியது.
சென். பீற்றர்ஸ் சார்பாக யுமெத் ஷிகார, டுலாஜ் நவோதய, குஷான் தரிந்து, டினீத் ரணசிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரையைப் பெற்றதோடு, ஷிகார ட்ரையை கொன்வேர்ஷனாக மாற்றியதோடு, பெனால்டியில் ஷிகார, தரிந்து ஆகியோர் புள்ளிகளைப் பெற்றிருந்தனர். இசிப்பத்தன சார்பாக, றினேஷ் சில்வா, டமிரு ராஜபக்ஷ ஆகியோர் தலா ஒவ்வொரு ட்ரையைப் பெற்றதோடு, இரண்டு ட்ரைகளையும் சில்வா கொன்வேர்ஷனாக மாற்றியதோடு, பெனால்டியொன்றுக்கான புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago