Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 ஜூன் 12 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் லசித் மலிங்கவின் பேஸ்புக் மூலம், நாடு முழுவதும் அறியப்பட்டஅநுராதபுரம், ஹொரவபொத்தானை, பத்தாவ பிரதேசத்தின் இளம் கிரிக்கெட் வீரர் பைனாஸின் இல்லத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சனிக்கிழமை (09) விஜயம் மேற்கொண்டதுடன், பைனாஸின் திறமையை பாராட்டி, வாழ்த்தி, ஒரு தொகை பணத்தையும் வழங்கிவைத்தார்.
அத்துடன், பைனாசின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் மற்றும் கிரிக்கெட்டில் அவருக்குள்ள ஈடுபாடு, அதீத திறமை குறித்து கேட்டறிந்துகொண்ட பதியுதீன், அவரின் எதிர்கால முன்னேற்றத்துக்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இதன்போது பைனாசின் பெற்றோர், உறவினர், சக விளையாட்டு வீரர் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் அங்கு ஒன்றுகூடியிருந்ததுடன், பதியுதீனுக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago