Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- அஸ்ஹர் இப்றாஹீம்
மருதூர் பிறீமியர் லீக்கில், அண்மையில் நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரண்ட்ஸுடனான போட்டியில் சாய்ந்தமருந்து லெவிண் ஹீரோஸ் வென்றது.
சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளனத்தின் ஓராண்டுப் பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 15 ஓவர்கள் கொண்ட கடின பந்து கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நாள் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளால் ஹீரோஸ் வென்றிருந்தது.
சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில், சாய்ந்தமருது கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.கே. காலித்தீன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பிரண்ட்ஸ், 11.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு, 65 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹீரோஸ், 6.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 32 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் இத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகவும் , அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிதத் லியனாராய்ச்சி கெளரவ அதிதியாகவும் , ஓய்வுபெற்ற சிரேஷ்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ. நபார் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்போட்டியின் நாயகனாக சாய்ந்தமருது ஹீரோஸின் முகமட் சல்பி தெரிவானார்.
இப்போட்டிக்கு நடுவர்களாக பாஹிர், அஸ்மி ஆகியோரும் மூன்றாம் நடுவராக செளக்கியும் , மத்தியஸ்தராக ரீ.கே.எம்.ஜலீலும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago