2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை

மருதமுனை அல்மனாரில் பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு

Shanmugan Murugavel   / 2025 மார்ச் 02 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்லம் எஸ். மெளலானா

கடந்த அரசாங்க காலத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோரின் நிதியொதுக்கீட்டில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு  வியாழக்கிழமை (27) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார பிரதி அமைச்சராக பைசால் காசிம் பதவி வகித்த காலப் பகுதியில் முன்னாள் மேயர் றகீப் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 5.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த உள்ளக பூப்பந்தாட்ட விளையாட்டரங்கு அமைக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் மேற்கொண்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X