Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஜூலை 16 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம். சனூன்
அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரச மட்டத்திலான விளையாட்டுப் போட்டித் தொடரில், (Masters Athletic Sri Lanka Champion Meet) 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் புத்தளம் நகரை சேர்ந்த விளையாட்டு துறை பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். துபைல் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
இதே தொடரின் ஓட்டப்போட்டியில் ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் வந்த, புத்தளம் நகரின் மற்றுமொரு விளையாட்டு துறை பொறுப்பாசிரியரும், துபைல் ஆசிரியரின் சகோதரருமான எம்.எப்.எம். ஹுமாயூன் போட்டி முடிவடைவதற்கு மூன்று மீற்றர் தூரம் இருக்கையில் கால் தடுக்கி வீழ்ந்ததில் அவருக்கான சந்தர்ப்பம் கைநழுவி போனது.
ஹுமாயூன் ஆசிரியருக்கான முதல் சந்தர்ப்பம் அற்று போனதால் அவரை பின் தொடர்ந்து வந்த இராணுவக் கமாண்டர் ஒருவர் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
எனினும் உயரம் பாய்தல் போட்டியில் ஆசிரியர் ஹுமாயூன் முதலாமிடம் பெற்று புத்தளம் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்க பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு உயரம் பாய்தலில் சாதனையாக இருந்த 1.57 மீற்றர் உயரம் சாதனையை முறியடித்து 2023ஆம் ஆண்டின் போட்டித் தொடரில் 1.60 மீற்றர் உயரம் என்ற புதிய (New Meet Record Sri Lanka) சாதனையை ஹுமாயூன் நிலை நாட்டியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
46 minute ago
51 minute ago