2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புதிய சீருடை அறிமுகம்

Freelancer   / 2023 ஜனவரி 09 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக்கழகத்தின் மற்றுமோர் அங்கமான மியன்டாட் லெஜன்ட் அணி   அங்குராப்பணமும், புதிய சீருடை அறிமுகமும், மூன்று போட்டிகள் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியும்  சாய்ந்தமருது  மல்ஹரியன் லெஜன்ட்  அணியினருக்கு எதிராக சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப்  வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் சாய்ந்தமருது மியன்டாட் லெஜன்ட் அணியினர் மூன்று போட்டியிலும் வெற்றிபேற்று கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டனர்.
இத்தொடரின் அதி கூடிய ஓட்டங்களைப்பெற்றவராக மியன்டாட் லெஜன்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யூ.எல்.எம். பாஹிம், அதிகூடிய விக்கெட்பெற்றவராக மியன்டாட் லெஜன்ட் அணியின் வீரர் எம்.ஏ. அஸ்தர் மற்றும் அதி கூடிய ஆறு ஓட்டங்களைப்பெற்றவராக மியன்டாட் லெஜன்ட் அணியின் எம்.ரி. பிர்தௌஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ. சம்சுதீன், கமு/கமு/எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் ஏ.எம். நாபித், உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

                          


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X