Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்தோட்டை எனசல் கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பழைய மாணவர்களை கல்லூரியுடன் இணைக்கவும் அவர்களின் மூலம் பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்வரும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தெல்தோட்டை மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கிரிக்கெட் தொடரொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.
எனசல்கொல்ல பிறீமியர் லீக் என்ற பெயரில் நடைபெறும் இத்தொடரின் ஆரம்ப நிகழ்வு எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஒன்றிணைவோம் பலம்பெறுவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ள இத்தொடரில் கல்லூரியின் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .