2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பலாங்கொட ஜெய்லானி தேசியக் கல்லூரி மாணவர்கள் சாதனை

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 17 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கத் தொடரில், இரத்தினபுரி, பலாங்கொட ஜெய்லானி தேசியக் கல்லூரி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றதுடன் மிகவும் குறைந்த புள்ளி வித்தியாசத்தில் தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர். 

இம்மாணவ, மாணவிகள் குறுகிய காலத்துக்குள் செஸ்ஸை பயின்று திறமையாக விளையாடக்கூடிய போட்டியாளர்களை எதிர்த்து வெற்றியீட்டினர்.

இலங்கை பாடசாலை செஸ் சங்கத்தால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்தொடரில் 13 வயது ஆண்கள், 13 வயது பெண்கள், 15வயது பெண்கள், 17 வயது பெண்கள்  ஆகிய நான்கு வயதுப் பிரிவுகளில் 28 மாணவ, மாணவிகள்  பங்குபற்றினர்.

இதில், 13 வயது ஆண்கள்பிரிவில் எம்.வை.ஏ. ஹஸீர் நடைபெற்ற 5 போட்டிகளிலும் சிறப்பு வெற்றி பெற்று பங்கு பற்றிய 150க்கு மேற்பட்ட மாணவர்களுள் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்கள் இவ்வாறானதொரு செஸ் விளையாட்டுப் போட்டியொன்றில் மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றி  மிகத் திறமையாக விளையாடி பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஜே.எம். மன்சூர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .