Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 12 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
விளையாட்டமைச்சின் 68வது விளையாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ள பிரான்சு சவாட் கிக் பாக்ஸிங் விளையாட்டானது கம்பளை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 2021ஆம் ஆண்டு கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் விளையாட்டு துறைத் தலைவர் எம்,என்,எம். நிம்ஷாட்டின் வேண்டுகோளுக்கிணங்க முன்னால் அதிபர் ஏ,எல்,எஸ். சிராஜினால் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு பொறுப்பாசிரியராக பிரதி அதிபர் டீ,எம்,எப். மூவி நியமிக்கப்பட்டு விளையாட்டமாசின் தேசிய சம்மேளனத்தின் உப தலைவர் டீ.எம். நாவ்ஷாத் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டு 10 மாணவர்களுடன் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 13/01/2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் லாஹூர் நகரில் இடம் பெற்ற தெற்காசியா பிரான்சு சவாட் கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கு பற்றி எம்.முஆவியா என்ற மாணவன் தங்கப் பதக்கத்தையும் பா.பஹ்மா என்ற மாணவி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் தாய் நாட்டிற்க்கும் பெருமை சேர்த்தனர்,
மற்றும் 03-04-05/12/2022 ஆண்டு விளையாட்டு அமைச்சின் அனுசரணையுடன் சப்ரகமுவ மாகாண உள்ளக அரங்கில் இடம்பெற்ற தேசிய போட்டியில் 12 தங்கப் பதக்கத்தையும் 11 வெள்ளிப் பத்தகத்தையும் பெற்று தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் கம்பளை நகரிற்கும் பெருமை சேர்த்தனர்.
இது மாத்திரமின்றி ஆண்டு உஸ்பகிஸ்தான் நாட்டில் டாஸ்கென்ட் நகரில் இடம்பெற்ற நான்காவது ஆசியபோட்டியில் எம் ஆர் எம் ஷமீக் என்ற மாணவன் 1வெள்ளி பதக்கமும் 1வெண்கல பதக்கமும். ஏ எஸ் அப்துல்லாஹ் என்ற மாணவன் 1 வெள்ளிப் பதக்கத்தையும். எம் எம் யூசுப் என்ற மாணவன் 1வெண்கல பதக்கத்தையும். எம் முஆவியா என்ற மாணவன் 1வெண்கல பதக்கமுமாக ஐந்து பதக்கங்கள் பெற்று தாய் நாடிட்கும் கம்பளை நகரிற்கும் சாஹிரா பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
வழமை போல் இம்முறை 17-18-19/11/2023 திகதி இடம்பெற்ற அகில இலங்கை மட்டத்திலான சுப பைட்டர் நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் போட்டியில் பங்குபற்றி 29 தங்கப் பதக்கத்தையும், 08 வெள்ளி பதக்கத்தையும், 01வெண்கல பதக்கத்தையும் பெற்று வழமைபோல் முதலிடத்தை தனதாக்கி என்பது குறிப்பிடத்தத்தக்கது.
கம்பளை ஸாஹிரா கல்லூரி அதிபர் ஐ. எ. எம். அப்சான் மற்றும் நிர்வாகம் மற்றும் கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெணாண்டோ தலைமையில் கெளரவிப்பு நிகழ்வு நடைப்பெற்றது
நவி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
4 hours ago
6 hours ago