Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 20 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற திறந்த கராத்தே சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய கிளிநொச்சி பள்ளிக்குட கிங்டம் சோட்டோகான் கராத்தே அகடமி மாணவர்கள் பதக்க வேட்டை நடாத்தியயுள்ளனர்.
ஏழு, எட்டு வயது குமித்தே பிரிவில் மதியழகன் டினுசேக் வெள்ளிப் பதக்கம் பெற்றதுடன், ஒன்பது, பத்து வயது குமித்தே பிரிவில் அருள்தாஸ் அஜய் வெள்ளிப் பதக்கம் பெற்றதுடன், 14, 15 வயது குமித்தேயின் 40 கிலோ கிராமில் தவக்குமார் அஸ்வினும், 55 கிலோ கிராமில் ரகு கலைச்செல்வனும் வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
16, 17 வயது குமித்தே 55 கிலோ கிராம் பிரிவில் ஜெரோன் ஜெனிஸ்டனும், 40 கிலோ கிராம் பிரிவில் ஜெயசங்கர் திவியனும் தங்கப் பதக்கம் வென்றனர். தவிர, 60 கிலோ கிராம் பிரிவில் சிவபாலசுந்திரம் நிமல்ராஜ்ஜும், 50 கிலோ கிராம் பிரிவில் மூர்த்தி கபில்நாத்தும், 55 கிலோ கிராம் பிரிவில் லிங்கேஸ்வரன் தர்சனும், 45 கிலோ கிராம் பிரிவில் பத்மநாதன் டிலக்சனும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
18,19 வயது குமித்தே 55 கிலோ கிராம் பிரிவில் மூர்த்தி அன்பரசன் தங்கப் பதக்கம் வென்றதுடன், 45 கிலோ கிராம் பிரிவில் மூர்த்தி கயேந்திரன் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
18,19 வயது காட்டாவில் மூர்த்தி கஜீந்திரன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
14,15 வயது காட்டாவில் ரஜீகரன் ஆதவன் தங்கப் பதக்கம் வென்றதுடன், எட்டு வயது காட்டாவில் மதியழகன் டினுஷேக், ஒன்பது வயது காட்டாவில் அருள்தாஸ் அஜய் ஆகியோரும் பதக்கங்களைப் பெற்றனர்.
இவர்களுக்கான பயிற்சியியை பயிற்றுவிப்பாளர் கு. கேதீஸ்வரன் வழங்கியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
6 hours ago