Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Janu / 2023 ஜூலை 17 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா " யங்பேட்ஸ் "விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் " நேருஜி 2023" சுற்று கிண்ணத்திற்கான அணிக்கு (7) ஏழு பேர் பங்குபற்றும் கால்பந்தாட்ட போட்டி சனிக்கிழமை (15) ஞாயிறுக்கிழமை (16) ஆகிய இரு தினங்களில் நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
32 அணிகள் பங்குபற்றிய இப் போட்டியின் இறுதிப்போட்டியில் நுவரெலியா "நேஸ்பி " அணியும் மாகாஸ்தோட்ட " பிரண்ஸ் "அணியும் போட்டியிட்டு 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் " நேஸ்பி" அணி வெற்றி பெற்று " நேருஜி 2023"வெற்றி கிண்ணத்தையும் பணப்பரிசையும் பெற்றுக்கொண்டனர். நேஸ்பி அணியைச்சேர்ந்த ராஜமாணிக்கம் பிரவின் மூன்று கோல்களை போட்டு நேஸ்பி அணியை வெற்றிப்பெற செய்தார்.
இப் போட்டியில் சிறந்த வீரராக நுவரெலியா "நேஸ்பி" அணியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் பிரவின் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக" நேஸ்பி" அணியின் கோல்காப்பாளரான எஸ். தீபன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பின் வரிசை களத்தடுப்பாளராக மாகாஸ்தோட்ட அணியைச்சேர்ந்த அருள் தெரிவு செய்யப்பட்டு பணப்பரிசும் வெற்றிக்கிண்ணங் களும் வழங்கப்பட்டன.
இவ் இறுதிப்போட்டியிலும் பரிசளிப்பு வைபவத்திலும் பிரதம அதிதியாக நுவரெலியா "யங்பேட்ஸ்" விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் முன்னாள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தின் உப தலைவரும் நுவரெலியா கால்பந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவரும் நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வருமான எல்.நேருஜியும் திருமதி சுமதி நேருஜியும் சிறப்பு அதிதிகளாக நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர்களான மஹிந்த தொடம்பே கமகே, சந்தனலால் கருணாரட்ன முன்னாள் பிரதி முதல்வர் யதர்சனா புத்திரசிகாமணி உட்பட பலர் கலந்துக்கொண்டு பரிசுகளும் வழங்கினார்கள்.
இவ் வைபவத்தின் போது கடந்த 1972 ஆம் ஆண்டு " யங்பேட்ஸ்" கழகம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது ஆரம்ப தலைவரான எல். நேருஜி, செயலாளரான கே. ரெங்கநாதன் மற்றும் பொருளாளர் பி. சுப்பிரமணியம் ஆகியோருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டதும்.குறிப்பிடதக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago
24 Nov 2024