2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக சபை

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 29 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஆ. ரமேஸ்

நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் 90ஆவது பொதுக்கூட்டம் நுவரெலியா கூட்டுறவு விடுதியில் ஞாயிற்று கிழமை (28) நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் உறுப்பினர்களும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தின்  நிர்வாகப் பிரிவினர் உட்பட  நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தில் 2024 ஆம் ஆண்டு அங்கம் வகிக்கும் 27 அணிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்குபற்றினர்.

இதன்போது நடப்பாண்டுகான நுவரெலியா கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் புதிய நிர்வாக சபைத் தலைவராக எம்.எஸ் லாபீர் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக எஸ். சாந்தனும், பொருளாளராக டீ. அருள்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் உப தலைவர்களாக ஜே. புகனேந்திரன், எஸ். புவேந்திரன், ஏ. டேவிட், வி.எஸ். கார்த்திக், கே. பிரதீபன் ஆகியோரும் உப செயலாளர்களாக பி. சிந்துஜன், எஸ். நிஷாந்தன் ஆகியோரும், உப பொருளாளராக எம்.எம். அணாப் தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதான நிறைவேற்று அதிகாரியாக ஸ்டீபன் தெரிவு செய்யப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.

.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .