2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நாவிதன்வெளி அமீரலி மைதானத்தில் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பு

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

பிராந்திய விளையாட்டுத்துறையை மேம்படுத்த முன்னாள் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் பல்வேறு வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக திகாமடுல்ல மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நாவிதன்வெளி மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த அமீரலி விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளுக்காக கடந்த காலங்களில் நிறைய நிதி ஒதுக்கீடுகளை செய்திருந்தார். அதனையொட்டியதாக அப்பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த ஒழுங்கான பார்ப்போர் அரங்கு இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக  எச்.எம்.எம் ஹரீஸின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து மில்லியன் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட பார்ப்போர் அரங்கின் நிர்மாணப் பணிகளை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேரில் சென்று பார்வையிட்டார். நிர்மாணப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பார்வையாளர் அரங்கில் மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகள் சம்மந்தமாகவும், ஏனைய தேவைகள் சம்மந்தமாகவும் இதன்போது கலந்துரையாடி இருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .