Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவி மபாஸ் மிஷ்ரத் சீமா, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 14 வயதுப் பிரிவு குண்டெறிதல் போட்டியில் பங்குபற்றி இரண்டாமிடத்தைப் பெற்று தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மபாஸ் மிஷ்ரத் சீமாவை தாத்தான்குடி பதுறியா வீதியில் வைத்து நேற்று முன்தினம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாடசாலையில் செங்கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது மபாஸ் மிஷ்ரத் சீமாவுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவம் வழங்கப்பட்டதுடன், இம்மாணவியை பயிற்றுவித்த ஏ.பி. சஸ்னா ஆசிரியை, ஏ.எஸ்.எம. ரிப்னாஸ் ஆசிரியர் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.
எம்.எஸ்.எம். நூர்தீன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .