Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளவாலை வருத்தபடாத வாலிப சங்கம் தனது 10ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தும் அணிக்கு 09 பேர் உள்ளடக்கிய "வாலிப கிண்ணம்" உதைபந்தாட்ட போட்டியில் துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் 2:1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்றது.
இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் துறையூர் ஐயனார் அணியை மணற்காடு சென் அன்ரனீஸ் அணி எதிர்த்தாடியது.
ஆரம்பத்தில் இருந்து மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் முதல் பாதியாட்டத்தில் அடுத்தடுத்து 02 கோல்களை ஐயனார் அணி போட பதிலுக்கு மணற்காடு சென் அன்ரனீஸ் அணி 01 கோலை போட ஆட்டம் சூடுபிடித்தது. மீண்டும் கோல் போடும் சந்தர்ப்பங்கள் இருந்தும் இரு அணிகளும் கோல் எதுவும் போடாத நிலையில் 02:01 என்ற நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றது.
மிக விறுவிறுப்பாக இடம்பெற்ற இரண்டாவது பாதியாட்டதில் மணற்காடு சென் அன்ரனீஸ் அணியினர் கோல் போடுவதற்காக போராடிய போதும் துறையூர் ஐயனார் அணியின் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் போடுவதற்காக கடும் முயற்சி மேற்கோண்டும் பலன் அளிக்காமல் போக முடிவில் துறையூர் ஐயனார் அணி 02:01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது..
ஐயனார் அணிசார்பாக சுபிதன், சுபீஜன் தலா ஒவ்வொரு கோலினையும் மணற்காடு அன்ரனீஸ் அணிசார்பாக றெஜிஸ்ரன் 01 கோலையும் போட்டார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக துறையூர் ஐயனார் அணியின் வீரர் சுபீஜன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அஸ்ஹர் இப்றாஹிம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .