2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட போட்டிகள்

Editorial   / 2019 மே 29 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கதிரவன்

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஆதரவில், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்திருந்த திருகோணமலை மாவட்டத்துக்கான பூப்பந்தாட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மக்கேசர் உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது.

10, 12, 14, 16, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஒற்றையர் போட்டியும், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இரட்டையர் போட்டியும், 12, 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒற்றையர் போட்டியும், ஆண்கள், பெண்களுக்கு திறந்த ஒற்றையர் போட்டியும், இரட்டையர் போட்டியும், ஆண்கள், பெண்கள் இணைந்த கலப்பு போட்டியுமாக 13 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 15 பேர் பங்கு கொண்டு இருந்தார்கள்.  

திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் சு. ஜெயசங்கர் தலைமையில் நடத்தப்பட்ட இப்போட்டிகளை திருகோணமலை நகர சபை தலைவர் நா. இராஜநாயகம், கடந்த வெள்ளிகிழமை தொடக்கி வைத்ததிருந்த நிலையில் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நா. இராஜநாயகம், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் திருமதி ஆரியவதி கலபதி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்தனர்.

முடிவுகள் பின்வருமாறு;

10 வயதுக்குட்பட்ட ஆண்கள்

  1. கே. டனூஜன்
  2.  எஸ். சருநிதன்
  3. இ. நிதீஸ்

12 வயதுக்குட்பட்ட ஆண்கள்

  1. சு. அஸ்வின்
  2. ஞா. ஜதுசிகன்
  3. சாமுவேல் ஒலிவ்டீன்

12 வயதுக்குட்பட்ட பெண்கள்

  1. ச. சதீசனா
  2. த. பிரணயா
  3. எஸ். யுகேசனா

14 வயதுக்குட்பட்ட ஆண்கள்

  1. ச. மோகீசன்
  2. ரி. சக்திதர்
  3. க. ரிஷிகேர்சன்

14 வயது பெண்கள்

  1. கே. அட்சரா
  2. ர. லிதுர்ஜா
  3. எம். டிலக்ஷி

16 வயதுக்குட்பட்ட ஆண்கள்

  1.  சி. கரிகாலன்
  2. ர. பானுசன்
  3. இ. மகிதாரன்

18 வயதுக்குட்பட்ட ஆண்கள்

  1. ச. ஜனாதன்
  2. கெவின் பாத்லெட்

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர்

  1.  சி. கரிகாலன், ர. பானுசன்
  2. ச. பிரணவன், இ. மகிதாரன்,
  3. கு. டாகினேசன், என்.தோகித்

திறந்த போட்டி ஆண்கள்

  1. த. நிலோஜன்
  2. சி. புஸ்பதரன்
  3. ச. ஜனாதன்

திறந்த போட்டி பெண்கள்

  1. நவோதயா அத்துகோரள,
  2. எம்.ஏ.எச்.கே. பெரேரா
  3. விட்யாதரன் சுருதிகா

திறந்த போட்டி ஆண்கள் இரட்டையர்

  1. சி.புஸ்தரன், எம்.ஏ.என்.சி. பெரேரா

திறந்த போட்டி பெண்கள் இரட்டையர்

  1. நவோதய அத்துகோரள்ள, பிரபோதயா அத்துகோரள்ள
  2. ருவந்தினி விதுஜாயினி, வடிவேல் கவிந்தினி
  3. அகில நிரோஜினி, எம்.ஏ.எச்.கே. பெரேரா

கலப்பு இரட்டையர்

  1. த. நிலோஜன், வடிவேல் கவிந்தினி
  2. ச. ஜனாதன், எஸ். சஹானா
  3. எம்.ஏ.என்.சி. பெரேரா, நவோதய அத்துகோரள்ள

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .