Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கு கோல் டைட்டான்ஸ் தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே டைட்டான்ஸ் தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெற ஸ்ரைக்கர்ஸ் தொடரிலிருந்து வெளியேறியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டைட்டான்ஸ்
ஸ்ரைக்கர்ஸ்: 74/10 (15.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: தப்ரையாஸ் ஷம்சி 4/20 [4], சீக்குகே பிரசன்னா 3/14 [3], லஹிரு குமார 2/9 [2], ஷகிப் அல் ஹஸன் 1/8 [3.4], கசுன் ராஜித 0/10 [2])
டைட்டான்ஸ்: 75/2 (8.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: லசித் குறொஸ்புள்ளே ஆ.இ 42 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெஃப்ரி வன்டர்சே 1/18 [3])
போட்டியின் நாயகன்: தப்ரையாஸ் ஷம்சி
இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது தகுதிகாண் போட்டியில் தம்புள்ள ஓறாவை டைட்டான்ஸ் எதிர்கொள்ளவுள்ளதுடன், இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள வெளியேற்றப் போட்டியில் பி-லவ் கண்டியும், நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸும் மோதவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago