2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

தகுதிகாண் போட்டிகளில் ஓறா

Freelancer   / 2023 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரின் தகுதிகாண் போட்டிகளுக்கு தம்புள்ள ஓறா தகுதி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் வௌ்ளிக்கிழமை (11)  நடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதை ஓறா உறுதிப்படுத்தியுள்ளது.

இப்போட்டி முடிவில் ஓறாவுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையில் 10 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலிலுள்ள ஸ்ரைக்கர்ஸ் மீதமுள்ள தமது இரண்டு போட்டிகளை வென்றாலும் எட்டுப் புள்ளிகளையே அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓறா ஆரம்பத்தில் நசீம் ஷா, சாமிக கருணாரத்ன, மதீஷ பத்திரண, ஜெஃப்ரி வன்டர்சேயிடம் அவிஷ்க பெர்ணாண்டோ, அணித்தலைவர் குசல் மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, தனஞ்சய டி சில்வாவை இழந்தபோதும் பென் மக்டர்மூட்டின் ஆட்டமிழக்காத 69 (46), அலெக்ஸ் றோஸின் 52 (38) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. வன்டர்சே 4-0-21-1 என்ற பெறுதியைக் கொண்டிருந்தார்.

பதிலுக்கு 167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஸ்ரைக்கர்ஸ், 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களையே பெற்று 50 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ஹஸன் அலி 4-0-16-3, நூர் அஹ்மட் 4-0-14-2, துஷான் ஹேமந்த 4-0-16-2, பினுர பெர்ணாண்டோ 3.4-0-18-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக மக்டர்மூட் தெரிவானார்.

இதேவேளை முன்னதாக நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான ஜஃப்னா கிங்ஸுடனான போட்டியில் பி-லவ் கண்டி வென்றது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (13) 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் கண்டியை ஓறா எதிர்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .