2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

டுபாயில் நடைபெறும் குத்துச்சண்டையில் புதுக்குடியிருப்பு யுவதி

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து ஒரு யுவதி டுபாயில் எதிர்வரும் 26 ஆம் திகதி பெறவுள்ள (Golden G Sports Association) குத்துச்சண்டை போட்டிக்குச் செல்கின்றார்.

01 ஆம் வட்டாரம் மருதமடுவீதி கைவேலி புதுக்குடியிருப்பில் வசிக்கும் யோகராசா நிதர்சனா தந்தை இல்லாத நிலையில் மிகவும் வறுமைக்குட்பட்ட குடும்பத்தில் வாழ்ந்துவரும் இவர் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியின் பழைய மாணவியாக தற்போது காணப்பட்டாலும் 2015ஆம் ஆண்டு தொடக்கம் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டு குத்துச்சண்டை பயிற்சிகளை பெற்று போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களை வென்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற குத்துச்சண்டை தேசிய போட்டியில் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டு தங்க பதக்கத்தை வென்றுள்ளதுடன் 48 தொடக்கம் 50 கிலோ கிராம் எடைகொண்ட போட்டிகளில் கடந்த 5 ஆண்டுகளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை வென்ற இவர் சர்வதேச தெரிவு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடியும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை பெரும்பான்மை இன பெண்ணிற்கே வெற்றி கிடைத்தது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த நிதர்சனா, “இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச விளையாட்டுபோட்டியில்கலந்துகொள்ளவேண்டு என்ற இலட்சியத்துடன் பயணிக்கின்றேன்.

எம்.ஏ.எஸ் குத்துச்சண்டை பயிற்சி கல்லூரியில் தான் பயிற்சி பெற்று வந்தேன் கொரோனா காரணமாக நான் எனது வீட்டிற்கு வந்துவிட்டேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் குத்துச்சண்டைக்கான சரியான பயிற்சி ஆசிரியர்கள் இல்லாத நிலையில் தற்போது நான் வவுனியாவிற்கு சென்று பயிற்சிகளையே மேற்கொண்டுவருகின்றேன். வீட்டில் கூட குத்துச்சண்டைக்குரிய பொருட்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றேன்.

என்னைப்போன்ற பல யுவதிகள் திறமைகளுடன் இருந்தும் அவர்கள் கஸ்ரத்தின் மத்தியில் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரமுடியாத நிலை காணப்படுகின்றது நானும் கஷ்டப்பட்ட ஒரு யுவதிதான் தாய்த்தமிழ் பேரவையின் உதவியால் டுபாய்க்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .