Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 மே 04 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
- டி. ஷங்கீதன்
நுவரெலியா 4 x 4 கழகத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் நடைபெற்ற ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு 4x4 ஜீப் சேற்றில் ஓடும் ஓட்டப் போட்டியில் முதலாமிடத்தை சுயார திலின பெற்றுக் கொண்டார்.
இரண்டாமிடத்தை, இந்திக்க சஞ்ஞேயும், மூன்றாமிடத்தை ரங்க ஆங்கமவும் பெற்றுக் கொண்டனர். இப்போட்டியில் இலங்கையில் பல இடங்களிலிருந்து 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
4*4 கழகத்தின் தலைவர் இசார வீரசிங்க தலைமையிலான குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற சுயார திலினவுக்கு 100,000 ரூபாய் பணப்பரிசும், வெற்றிக் கேடயமும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட இந்திக்க சஞ்ஞேக்கு 50,000 ரூபாய் பணப் பரிசும் வெற்றிக் கேடயமும், சான்றிதழும், மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்ட ரங்க ஆங்கமவுக்கு 25,000 ரூபாய் வெற்றிக் கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த 4x4 ஜீப் ஓட்டப்போட்டியின் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதிகளாக நுவரெலியா மாநகர சபைத் தலைவர் சந்தன லால் கருணாரட்ன, நுவரெலியா மாநகர சபை முன்னாள் தலைவரும் தற்போதய மாநகரசபை உறுப்பினருமான மஹிந்த தொடம்பே கமகே மற்றும் நுவரெலியா மோட்டர் ரேஸிங் கழகத்தின் தலைவர் உஜித்த சமரஜீவ உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago