Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு மூவர்ஸ் கிரிக்கெட் கழகத்தின் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட100 பந்துகள் கொண்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் வயம்ப டஸ்கர்ஸ் கிரிக்கெட் கழகம் செம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
12 அணிகள் பங்கு பற்றிய இத் தொடரின் இறுதிப் போட்டி நீர்கொழும்பு திம்பிரிகஸ்கொட்டுவவில் அமைந்துள்ள மாரி ஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டிக்கு குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த வயம்ப டஸ்கர்ஸ் அணியும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நேட்டிவ் கிரிக்கெட் கழகமும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வயம்ப டஸ்கர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 100 பந்துகளுக்கு முகம் கொடுத்து 08 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை பெற்றனர். இதில் அணித்தலைவர் சரோத் 20 பந்துகளுக்கு 34 ஓட்டங்களையும்,ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜஃப்ரான் 20 பந்துகளுக்கு32 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேட்டிவ் கிரிக்கெட் கழகம் 100 பந்துகளை முகம் கொண்டு சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர். இதில் வயம்ப டஸ்கர்ஸ் அணி சார்பாக முஸர்ரஃப் 03 விக்கெட்டுகளை பெற்றுக் கொண்டார்.
இத்தொடரின் முடிவில் சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்ட வயம்ப டஸ்கர்ஸ் கழகத்திற்கு 250,000 ரூபாய் பணப்பரிசு பெறுமதியான வெற்றி கேடயமும் வழங்கப்பட்டது. இப்போட்டியின் மற்றும் தொடரின் சிறப்பாட்டக்காரராக முஸர்ரஃப் தெரிவு செய்யப்பட்டார்.
எம்.யூ.எம்.சனூன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago