2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சம்மாந்துறை வி. கழகத்தை வென்ற சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ்

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை சிநேகபூர்வ போட்டிகளில் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் அணி பதிவு செய்தது.

சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற அணிக்கு 11 பேர் 18 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கட் போட்டியில் இந்த வெற்றி பதிவானது.



இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கே. முஸ்னி அஹமட் 70, பர்ஹத் பராஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு 183 எனும் வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் 18 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களையே பெற்று 58 ஓட்டங்களால் தோல்வியடைந்தது, துடுப்பாட்டத்தில், சர்பின் 26, றிகாஸ் 25 ஓட்டங்களைப் பெற்றனர்.

இப்போட்டியின் போட்டியின் சிறந்த வீரருக்கான விருது கே. முஸ்னி அஹமட்டுக்கும், சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய பர்ஹத் பராஸுக்கு பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .