Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 மே 09 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.அஷ்ரப்கான்
நிந்தவூர் "ப்ளு மவுண்டன் சம்பியன்ஸ் கிண்ணம்-2024 " இன் சம்பியனாக "ப்ளு மெவுண்டன் " அணி தெரிவானது.
"ப்ளு மவுண்டன் சம்பியன்ஸ் கிண்ணம்-2024 " இன் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இண்டு நாட்கள் போட்டியாக நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த போட்டியில் நிந்தவூர் கல்முனை, பாலமுனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை,அக்கரைப்பற்று, ஆகிய 24 அணிகள் பங்குபற்றின.
இச்சுற்றுப்போட்டியில் இறுதியாட்டத்திற்கு நிந்தவூர் ப்ளு மவுண்டன் அணியினை எதிர்த்து நிந்தவூர் அட்வென்சர் விளையாட்டுக்கழகம் மோதியது.
இதில் சம்பியன் கிண்ணத்தையும், 20 ஆயிரம் பணப்பரிசையும் ப்ளு மவுண்டன் தனதாக்கி கொண்டது. இரண்டாம் இடத்தை தனதாக்கிய நிந்தவூர் அட்வென்சர் விளையாட்டுக் கழகத்தினருக்கு 10 ஆயிரம் பணப்பரிசும், கேடயமும் வழங்கி வைக்கப்பட்டது..
சுற்றுப் போட்டியில் தொடர் ஆட்ட நாயகனாக ப்ளு மவுண்டன் அணியின் நஜாத், சிறந்த துடுப்பாட்ட வீரராக அட்வென்சர் அணியின் வாபீக், சிறந்த பந்துவீச்சாளாக ப்ளு மவுண்டன் அணியின் நபீர்,இறுதி போட்டியின் ஆட்ட நாயகனாக பிர்னாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இறுதிப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக அட்வென்சர் விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.முஹாஜிர் கலந்து கொண்டு கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் ப்ளு மவுண்டன் கழகத்தின் தலைவர் எம். சம்சுன் அலி, சுலைமான் பாரி, அட்வென்சர் விளையாட்டு கழகத்தின் முகாமையாளர்
மர்சூக், சோஷியல் டிவி பணிப்பாளர் என்.எம் சிராஜ், ஸ்போர்ட்ஸ் மீடியா தலைவர் வை.சியான், இசாக், ப்ளு மவுண்டன் கழகத்தின் செயலாளர் சாக்கீர், பொருளாளர் சமீம், நிகாப், சப்ரி நெளசாட் , இம்சாத், ஆசிக் ஆகியோரம் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
5 hours ago