Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 30 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான எல்லே தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனாகியது.
யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில், சென். பற்றிக்ஸ் கல்லூரியை வென்றே நெல்லியடி மத்திய கல்லூரி சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென். பற்றிக்ஸ் கல்லூரி 40 பந்துகளில் 12 பேர் ஆட்டமிழப்புக்கு மூன்று ஓட்டங்களைப் பெற்றது. சென். பற்றிக்ஸ் கல்லூரி சார்பாக, காஸ்ரோ, கொலிங்டன், றொமின்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்தைப் பெற்றனர்.
பதிலுக்கு, நான்கு ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய நெல்லியடி மத்திய கல்லூரி, 10 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. நெல்லியடி மத்திய கல்லூரி சார்பாக, பிரதீசன், அம்சன், சாகீர், சாருசன் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்தைப் பெற்றனர்.
இத்தொடரில் மூன்றாமிடத்தை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago