Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சண்பிளவர் விளையாட்டுக் கழகம் நடாத்திய சண்பிளவர் வெற்றிக் கிண்ணத் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
சண்பிளவரின் 40ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற இத்தொடரில், சாய்ந்தமருது பொது மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக் கழகத்தை வென்றே சம்மாந்துறை சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை 18 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 143 ஓட்டங்களென்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜிம்ஹானா 18 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்களையே பெற்று 45 ஓட்டங்களால் தோற்றது.
சம்பியனான சம்மாந்துறைக்கு 30,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இரண்டாமிடம் பெற்ற ஜிம்ஹானாவுக்கு 20,000 ரூபாய் பணப்பரிசும், கிண்ணமும் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
37 minute ago
40 minute ago