Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
வடிவேல் சக்திவேல் / 2019 ஜூன் 25 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்திய 10ஆவது பருவகால படுவான்சமர் கால்பந்தாட்டத் தொடரில் காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
ஈஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் பி. நீதிதேவன் தலைமையில் கொக்கட்டிச்சோலை குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிழக்கு மாகாணத்திலிருந்து 32 அணிகள் பங்கேற்ற விலகல் முறையிலான குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பட்டிப்பளை வைரவர் விளையாட்டுக் கழகத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
இத்தொடரில் மூன்றாமிடத்தை கரையாக்கந்தீவு காந்தி விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது.
இந்ந்த இறுதிப் போட்டியில், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.மு.கு. சச்சிதானந்தக்குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி. புஸ்பலிங்கம், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் வண்ணக்கர் தலைவர் பூ. சுரேந்திரராசா, செயலாளர் இ. சாந்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago