2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனானது அரியாலை சனசமூக நிலையம்

Editorial   / 2019 மே 19 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன்

யாழ்ப்பாணம் அரியாலை அருணோதயா சனசமூக நிலையத்தின் 59ஆவது ஆண்டு நிறைவு விழாவின் அமரர்களான கந்தையா கனகரத்தினம், கந்தையா புஸ்பராசா ஞாபகர்த்தமாக அன்னார்களது சகோதரி வசந்தி ஆதரவில், அழைக்கப்பட்ட உள்ளூர் கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் அரியாலை சனசமூக நிலையம் சம்பியனாகியது.  

அருணோதயா சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று  நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் அரியாலை சரஸ்வது சனசமூக நிலையத்தை வென்றே அரியாலை சனசமூக நிலையம் சம்பியனானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம், ஐந்து ஓவர்களில் 40 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டினேஸ் 16, அம்பிகைநேசன் ஏழு ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சதீஸ், ராஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 பதிலுக்கு, 41 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுதாடிய அரியாலை சனசமூக நிலையமானது ஜெரோசனின் அபாரமான துடுப்பாட்டத்தால், 4.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஜெரோசன் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .