2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனானது அக்கரைப்பற்று யங்ஸ்டார் வி. க

வி.சுகிர்தகுமார்   / 2019 மே 28 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடீஸ்வரன் றொபின் – 2019 மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் அக்கரைப்பற்று யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற, ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு அணிகள் கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் பெயரில் உருவாக்கப்பட்ட இத்தொடரின் இறுதிப் போட்டியில், அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே யங்ஸ்டார் சம்பியனாகியிருந்தது.

ஆறு ஓவர்கள் கொண்ட விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகம், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த துடுப்பாட்டத்தால் ஆறு ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்றுது.

பதிலுக்கு, 58 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய யங்ஸ்டார் விளையாட்டுக் கழகம், 5.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இத்தொடரின் நாயகனாக ஜொலிபோய்ஸ் விளையாட்டுக் கழகத்தின் எஸ். தினுஜன், இறுதிப் போட்டியின் நாயகனாக யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ரி. சுஜிந்தன் ஆகியோர் தெரிவாகினர்.

சம்பியனான, இரண்டாமிடம் பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டமையைத் தொடர்ந்து கவீந்திரன் கோடீஸ்வரனின் சொந்த நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சகல விளையாட்டுக்கழகங்களுக்குமான சீருடை, விளையாட்டு உபகரணங்கள் அவரால் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .