2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

சம்பியனான புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

டி.பி. ஜாயா ஞாபகார்த்த அகில இலங்கைப் பாடசாலைகள் குத்துச் சண்டைப் போட்டியில் கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி சம்பியனானது.

கண்டி திருத்துவக் கல்லூரி, வெயங்கொட பண்டாரநாயக்கா வித்தியாலயம், இரத்தினபுரி சீவலி வித்தியாயலம், கண்டி சுமங்கல வித்தியாலயம், கண்டி கிஸ்ஸ்வூட் கல்லூரி, பிலிமத்தலாவ லங்காதிலக வித்தியாயலம், கொழும்பு நாலந்தா கல்லூரி, மஹாநாம கல்லூரி போன்றவற்றிலிருந்து 24 பிரிவுகளில் 262 போட்டியாளர்கள் கடந்த ஐந்து நாள்களாக  கண்டி, அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிகளின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

தோல்வியடைந்தவர்களுள் சிறந்த போட்டியாளராக வை.வீ.எம். பிரேமரட்ன (மவுண்டலெவேனிய புனித ஜோசப் கல்லூரி),  சிறந்த குத்துச் சண்டை வீரராக டி.எம்.டி. தென்னகோன்(புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி, கண்டி), தெரிவாகினர்.

மூன்றாமிடத்துக்கு இரண்டு தங்கம், ஒரு வௌ்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று கடுகண்ணாவ தேசிய பாடசாலை தெரிவானது. மூன்று தங்கம், மூன்று வெண்கலப் பதக்கங்களைப் பெற்று பேராதெனிய மத்திய கல்லூரி இரண்டாமிடத்தைப் பெற்றது.

கண்டி புனித சில்வெஸ்டர்ஸ் கல்லூரி மூன்று தங்கம், ஒரு வௌ்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் என்பனவற்றபை் பெற்று முதலாமிடத்தைப் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .