2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

சம்பியனான பட்டிருப்பு கல்வி வலயம்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளில் பட்டிருப்பு கல்வி வலயம் மீண்டும் சம்பியனானது.

28 முதலிடங்களுடன் 189 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு வலயம் சம்பியனானது.  

பட்டிருப்பு வலய பாடசாலைகளில் 95 புள்ளிகளுடன் களுதாவளை மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), செட்டிப்பாளையம் மகா வித்தியாலயம் 58 புள்ளிகளையும், மண்டூர்  சக்தி மகா வித்தியாலயம் 18 புள்ளிகளையும், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலம் 5 புள்ளிகளையும் . மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம் 5 புள்ளிகளையும், மண்டூர்  விக்னேஸ்வரா மகா வித்தியாலம் 5 புள்ளிகளையும், தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் 3 புள்ளிகளையும், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் ஒரு புள்ளியையும் பெற்றுக் கொண்டன.

இடங்களின் அடிப்படையில் 12 முதலிடங்களுடன் களுதாவளை மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாமிடத்தையும், 10 முதலிடங்களுடன் செட்டிபாளையம் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தையும், 3 முதலிடங்களுடன் மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலயம்  மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது. பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம், மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம், மண்டூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் ஆகியன தலா ஒவ்வொரு முதலாமிடங்களைப் பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X