Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
எஸ்.றொசேரியன் லெம்பேட் / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் நானட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட டைமன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 45ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாபெரும் கால்பந்தாட்டத் தொடரில் சென். ஜோசப் முத்தரிப்புத்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
கடந்த வாரயிறுதியில் சுமார் 40 அணிகள் பங்குபற்றிய இத்தொடரானது நானட்டான் பிரதேச பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிலையில், சென். சேவியர் தேவன்பிட்டி விளையாட்டுக் கழகத்தை வென்றே சென். ஜோசப் முத்தரிப்புத்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில், பெனால்டியில் 4-3 என்ற ரீதியில் வென்று சென். ஜோசப் முத்தரிப்புத்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனாகியிருந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள், பணப்பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த இறுதிப் போட்டியில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் நானட்டான் பிரதேச செயலகப் பிரதேச செயலாளர், நானட்டான் பங்குத்தந்தை, டைமண்ட் ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago