2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

சம்பியனான 2017 அணி

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 28 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எச்.எம்.எம். பர்ஸான்

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 106ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் 2017ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் பாடசாலையில் கல்விகற்ற அணி சம்பியனானது.

அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், 2006 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்ற அணியை வென்றே 2017ஆம் ஆண்டு அணி சம்பியனானது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 2006 அணி, 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 109 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 2017 அணி 9 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.

இறுதிப் போட்டியின் நாயகனாக 2017 அணி வீரர் இன்ஷாப்பும், தொடரின் நாயகனாக 2017 அணி வீரர் நிஷாத், சிறந்த களத்தடுப்பு வீரராக 2004 அணி வீரர் ஜலால்தீன், சிறந்த பந்துவீச்சாளராக 2017 அணி வீரர் ஆஷிக், சிறந்த துடுப்பாட்டவீரராக 1998 அணி வீரர் முஹம்மது அலி ஆகியோர் தெரிவாகினர்.

அத்துடன், தொடரில் சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய அணியாக 2001 அணியும், சாதனைகள் பல நிகழ்த்திய அணியாக 1998 அணியினரும் தெரிவு செய்யப்பட்டு நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .