Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 11 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே. கண்ணன்
யாழ். கரவெட்டி பிரதேச செயலக பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில், கரணவாய் கிழக்கு இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
இமையாணன் மத்தி விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில், வதிரி ஶ்ரீமுருகன் விளையாட்டுக் கழகத்தை வென்றே கரணவாய் கிழக்கு இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.
இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீமுருகன் விளையாட்டுக் கழகம், 15 ஓவர்களில் 56 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், சசி 16, மலரவன் ஒன்பது ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், வனிதன் 5, வினோஜன்3, சஜீவன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 57 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கரணவாய் கிழக்கு இளைஞர் விளையாட்டுக் கழகம், 14.2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்து சம்பியனாகியது. துடுப்பாட்டத்தில், திருபரன் 16, டிலக்ஷன் 12 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மலரவன் 4, கிருசிகன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago