Janu / 2024 ஏப்ரல் 17 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் இடம்பெற்று வரும் ஏப்ரல் வசந்தகால நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டுத் துறை அமைச்சி மற்றும் "ரோயல் டேப்" கிளப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் கவர்னர்ஸ் கிண்ணத்திற்கான குதிரைப் பந்தயப் போட்டியில் நுவரெலியா ரேஸ்கோஸ் கிராமத்தை சேர்ந்த குதிரை ஓட்ட வீரர் லோகேந்திரன் ரவிக்குமார் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்று வரும் ஏப்ரல் வசந்தகால கொண்டாட்டங்களில் குதிரை ஒட்ட பந்தைய போட்டி சிறப்பு அம்சத்தை கொண்டதாகும்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இவ்வருடத்திற்கான குதிரை ஒட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த குதிரைப் பந்தய வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வெற்றிப்பெற்றவர்களுக்கான கேடயம் மற்றும் பரிசுகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வழங்கினர்.
ஆ.ரமேஸ்





3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
14 Dec 2025