2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

கிரிக்கெட் விளையாடும் பிள்ளைகளுக்கு உபகரணங்கள்

Shanmugan Murugavel   / 2024 ஜூலை 21 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சிவாணி ஸ்ரீ

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் கிரிக்கெட் விளையாடும் பிள்ளைகளுக்கு உபகரணங்களை இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் அறக்கட்டளை வழங்கி வைக்கும் நிகழ்வானது அறக்கட்டளையின் தலைவர் நவீன் திஸாநாயக்க தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

நாடு முழுவதுமுள்ள கிட்டத்தட்ட 500 பிள்ளைகளுக்கு ஆதரவை வழங்கும் "தைரியத்தின் குழந்தைகள்" திட்டத்தின் மற்றொரு படியாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிரிக்கெட்டில் ஈடுபடும் குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து, இத்திட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100,000 ரூபாய் பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை இலங்கை கிரிக்கெட் அறக்கட்டளையின் ஊடாக நன்கொடையாக வழங்குகிறது.

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த கிரிகெட் வீரர்களான இவர்கள் இந்த கிரிக்கட் விளையாட்டில் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்திய திறமையான வீரர்களாவர்.

இதன்போது கருத்து தெரிவித்த நவீன், “கிரிக்கெட் விளையாட்டு எப்போதும் ஏனைய விளையாட்டை விட மேலானது. இது தனிமனித தன்மையையும் சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கான வழிமுறையாகும்.

இந்தத் திட்டம் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் முகம் கொடுக்கும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்கொள்ளும் சக்தியாகவும் அமைகிறது” எனக் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X