Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூன் 12 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
நுவரெலியா கால்பந்தாட்ட லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான லீக் போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பும் மற்றும் 2022 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டுக்கான தங்க கிண்ணம் மற்றும் வெள்ளி கிணங்களுக்கான பரிசளிப்பு வைபவம் நுவரெலியா கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும் நுவரெலியா மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான ஆர். கேதிஸ் தலைமையில் ஞாயிறு (11)நடைபெற்றது.
இந்த போட்டியில் யங் பேர்ட்ஸ் அணியைச் சேர்ந்த வி. விவேக் சிறந்த விளையாட்டு வீரராகவும் சிறந்த கோல் காப்பாளராக யுனைடெட் அணியின் எம். ரஹீமும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இந்த போட்டி தொடரில் வெள்ளிக்கிண்ணத்தை ஸகிராப் தோட்டத்தை சேர்ந்த "சன்பெர்ட்ஸ்" அணியினர் பெற்றுக் கொண்டனர். இதில் சிறந்த விளையாட்டு வீரராக ஜே ஸ்டீபன் ராஜ் மற்றும் சிறந்த கோல் காப்பாளராக வி. எஸ் .கார்த்திக்கும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அதே வேளை" ஏ "பிரிவிற்கான லீக் சுற்று போட்டியில் முதலாம் இடத்தைப் நேஸ்பி லேக்சைட் அணியும், " பீ" பிரிவிற்கான போட்டியில் முதலாம் இடத்தை ஹைபோரெஸ்ட் அணியினரும் "சி" பிரிவுக்கான போட்டி தொடரில் "பிரண்ட்ஸ்" அணியினரும் வெற்றிபெற்று பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.
" ஏ" பிரிவு போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக நேஸ்பி அணியின் வீரரான பிரவீன் குமாரும் "பீ" பிரிவு போட்டியில் சிறந்த விளையாட்டு வீரராக ஐபோரெஸ்ட் அணியின் வினோத்குமார் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இவ் பரிசளிப்பு வைபவத்தில் முன்னாள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் ,நுவரெலியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர்களான மஹிந்த தொடம்பே கமகே, சந்தன லால் கருணாரட்ன நுவரெலியா கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் ஆர்.கேதீஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு வெற்றி கிண்ணங்களையும் பதக்கங்ளையும் பரிசுகளையும் வழங்கினார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
9 hours ago
24 Nov 2024