2024 டிசெம்பர் 30, திங்கட்கிழமை

களுதாவளை தேசிய பாடசாலை 12 தங்கம் வென்று சாதனை

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 26 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் களுதாவளை மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 12 முதலிடங்கள் உள்ள்டங்கலாக 26 முதல் மூன்றுக்குள்ளான இடங்களைப் பெற்று ஆறு புதிய கிழக்கு மாகாண சாதனையுடன் 31 மாணவர் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் 5 இரண்டாமிடங்களையும் 9 மூன்றாமிடங்களைப் பெற்று 95 புள்ளிகளுடன் கிழக்கு மாகாணத்தில் அதிக முதலிடங்களையும், அதிக புள்ளிகளையும் பெற்றுக் கொண்ட பாடசாலையாக களுதாவளை பாடசாலை சாதித்துள்ளது. 

குறிப்பாக ஆண்கள் பிரிவில் 51 புள்ளிகளையும், பெண்கள் பிரிவில் 44 புள்ளிகளையும் களுதாவளை பாடசாலை பெற்றுக் கொண்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X