Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 25 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நூருல் ஹுதா உமர், அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை பிரதேசத்தின் மூத்த கழகங்களில் ஒன்றான கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டு கழகத்தின் 26ஆவது வருடாந்த பொதுகூட்டமும், நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக தெரிவும் சமாதான கற்கைகள் நிலைய சாம்மாந்துறை வளாகத்தில், கழக செயலாளர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எல். றியாஸின் நெறிப்படுத்தலில் கழகத் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். ஜெஸ்மின் இந் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்த பொதுகூட்டத்தில் கடந்தாண்டின் இறுதி கூட்டத்தின் கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை விடயங்கள் என்பன எடுத்துரைக்கப்பட்டு சபையோரின் அங்கிகாரம் பெறப்பட்டதுடன் ஹொலிபீல்ட விளையாட்டு கழகம் 26 ஆண்டுகள் கடந்து வந்த பாதைகள் தொடர்பிலும், கடந்த கால செயற்பாடுகள் தொடர்பிலும் கழக நிர்வாகிகளால் நினைவு உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கழகத்தின் கால் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி தொடர்பிலுமான விடயங்கள் இங்கு ஆராயப்பட்டதுடன், சாதனையார்களின் கௌரவிப்புக்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகம். தெரிவு செய்யப்பட்டது.
அந்த வகையில் புதிய நிர்வாகத் தலைவராக மீண்டும் ஜெஸ்மின், செயலாளராக பேராசிரியர் கலாநிதி எஸ்.எல். றியாஸ், பொருளாளராக எம்.எச்.எம். ஹனீஃப் ஆகியோரும் தவிசாளராக சமீர் ஜுனூஸ் மற்றும் பிரதித்தவிசாளராக யூ.எல்.எம். றியாஸ், உபசெயலாளராக பஸ்மி காசிம், கலாச்சார செயலாளராக மௌலவி சபா முஹம்மத் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளன தலைவர் இந்திக்க நளின் ஜெயவிக்ரம, செயலாளர் சித்தார்த் லியானாராய்ச்சி, செயற்குழு உறுப்பினர்கள் கண்காணிப்பாளர்களாக கலந்து கொண்டதுடன், ஹொலிபீல்ட விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளன நிர்வாகிகள் கல்முனை ஹொலிபீல்ட விளையாட்டு கழக நிர்வாகிகளால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
32 minute ago
42 minute ago
1 hours ago